×

கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் கோயில்களில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம், ஆக.3: திருஉத்தரகோசமங்கை மற்றும் கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் பவுர்ணமியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் திருவிளக்கு நடந்தது. ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹிஅம்மனுக்கு பால், குங்குமம் உள்ளிட்ட பல வகை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் மஞ்சள் அறைத்து மஞ்சள் காப்பிட்டும், விளக்கேற்றியும் வழிபட்டனர்.இதுபோன்று கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன், பாதாளகாளி அம்மனுக்கு மஞ்சள், பால், மஞ்சள், தேன் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதனை போன்று ஆப்பனூர் அரியநாயகி அம்மன், கடலாடி பத்திரகாளியம்மன், காமாட்சியம்மன், சந்தனமாரியம்மன், ஏ.புனவாசல் உய்வந்தம்மன், சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் பாதாள காளியம்மன், மேலக்கொடுமலூர் குமரன், முதுகுளத்தூர் சுப்ரமணியர், வழிவிடு முருகன். சாயல்குடி அருகே கூரான்கோட்டை தர்மமுனீஸ்வரர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் உள்ளிட்ட கோயில்களில் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. கோயில்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் கோயில்களில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Poornami ,Cuddaly, Mudukulathur ,Ramanathapuram ,Thiruuttharakosamangai ,Cuddaladi ,Mudukulathur ,Chayalkudi ,Cudaladi ,Muthukulattur ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?